Thursday, April 28, 2011

ko new film


Starring Jeeva, Ajmal Ameer, Karthika Nair, Piaa Bajpai, Prakash Raj, Sona Heiden, M.S.Bhaskar, Jegan
Directed by K. V. Anand
Produced by Kumar
Jayaraman Written by K. V. Anand, Subha
Music by Harris Jayaraj
Cinematography Richard Nathan
Editing by Anthony
Studio R. S. Infotainment
Distributed by Red Giant Movies
Release date(s) April 22, 2011
Country India
Language Tamil
click to get ko film......ko ....ko.... jeeva, ajmal, k.v. anand
http://www.fileserve.com/file/rmtXPqT/KoKi[TamilPirates.com](00h00m00s-00h32m54s).avi
http://www.fileserve.com/file/9dNdqd8/KoKi[TamilPirates.com](00h32m54s-01h05m48s).avi
http://www.fileserve.com/file/g4tGPVX/KoKi[TamilPirates.com](01h05m48s-01h38m42s).avi
http://www.fileserve.com/file/CWwKkm3/KoKi[TamilPirates.com](01h38m42s-02h11m37s).avi
http://www.fileserve.com/file/V3rZdUd/KoKi[TamilPirates.com](02h11m37s-02h44m31s).avi

Saturday, April 9, 2011

என்னை தனிமைப்படுத்த நினைக்கும் தி.மு.க.,வினர்: விஜயகாந்த்


பண்ருட்டி: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பணத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாம் நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நெய்வேலி இந்திரா நகர், வடலூர், கடலூர் பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் சிவசுப்ரமணியன், சொரத்தூர் ராஜேந்திரன், சம்பத் ஆகியோரையும், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவையும் ஆதரித்து பேசியதாவது: தி.மு.க., ஆதரவு "டிவி'க்களில் என்னைப் பற்றி தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பணத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த விஜயகாந்த் பணத்துக்கு விலை போகிறவன் அல்ல.

நீங்கள் (தொண்டர்கள்) கூட்டணி வேண்டும் என, சேலத்தில் சொன்னீர்கள். அதன்படி, என் மானசீக குரு எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளேன். தி.மு.க., கூட்டணி எண்ணெய் - தண்ணீரை போன்றது. ஒட்டாது. நம் கூட்டணி தேனும், பாலும் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவேன். தி.மு.க., ஆட்சிக்கு ஜீரோ மார்க் என, குரல் கொடுத்த ராமதாஸ் இப்போது அதை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? டில்லியில் அன்னா ஹசாரே என்ற சமூக சேவகர் ஊழலை ஒழிக்கவும், லோக்பால் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகிறார். இது காங்., கட்சிக்கு சேர்த்துதான். அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அன்னா பெயரை கொண்டவர் டில்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார். இங்கு அண்ணா துரை பெயரைச் செல்லி கொள்ளை அடிக்கிறார்கள். சோனியா, இங்கு தி.மு.க., அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டும் என பிரசாரம் செய்கிறார். இவர்கள் செய்தது சாதனைகளா? சோதனையும், வேதனையும் தான் உள்ளது. தி.மு.க., தோல்வி என மக்களால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இந்த தீர்ப்பு திருத்தி எழுத முடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

கொள்ளையடித்ததில் கருணாநிதி கின்னஸ் சாதனை: ஜெ., ஆவேசம்


சேலம்: ""மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்கள் மூலம், கோடிக்கணக்கில் தன் குடும்பத்துக்காக வருவாய் ஈட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் கருணாநிதி. குடும்ப ஆட்சியை கூண்டோடு அகற்ற இந்த தேர்தல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு; இத்தேர்தல் மூலம் அவர்களை விரட்ட வேண்டும்,'' என, சேலம், நாமக்கல் மாவட்ட தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், அயோத்தியாபட்டணம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: நடக்க உள்ள தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல; மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். உங்களை, குடும்ப கொள்ளையர்களிடம் இருந்து விடுவிப்பதற்கான தேர்தல். தன் குடும்ப நன்மைக்காக, 56 லட்சம் ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக, பத்திரம் வழங்கி உள்ளனர். பத்திரத்தை வாங்கியோர், மூன்று ஆண்டுகளாக நிலத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். இலவச கலர் "டிவி' திட்டத்தில், ஒரு கோடியே 62 லட்சம், "டிவி' கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அது உங்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் 4,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். ஒரு கிலோ இலவச அரிசி திட்டம், கடத்தல்காரர்களுக்கானது. தரமான அரிசி, அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு, தரமற்ற அரிசி, தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு கோடி; உங்களுக்கு வியாதி. இது தான் இத்திட்டத்தின் மிச்சம்.

முக்கிய ஆபரேஷனை ஒரு லட்சம் ரூபாயில் செய்ய முடியுமா? காலரா, சிக்-குன் குனியா, மலேரியா போன்றவற்றுக்கு தான் அது பயன்படும். இத்திட்டத்திலிருந்து பல தனியார் மருத்துவமனைகள், வெளிவந்து விட்டன. ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 3,000 கோடி ரூபாய் செலுத்தி, 600 கோடி ரூபாய் லாபம் பார்த்து உள்ளனர். கான்கிரீட்டுக்கான கம்பிகளை விற்க, ஸ்டாலின் மருமகன் குடும்பத்துக்கு, கான்ட்ராக்ட் விட்டுள்ளனர். மணல், கிரானைட் மூலம், 50 ஆயிரம், 80 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளனர். கருணாநிதி, தன்னுடைய மகனுக்கு துணை முதல்வர் பதவி, இன்னொரு மகனுக்கு மத்திய அமைச்சர், பேரனுக்கு மத்திய அமைச்சர், மகளுக்கு எம்.பி., பதவி வழங்கியுள்ளார். "ஊழல் செய்வதில் விஞ்ஞான முறையைக் கண்டுபிடித்தவர் கருணாநிதி' என, நீதிபதி சர்க்காரியா கூறியுள்ளார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார். தற்போது ராஜா சிறையில் உள்ளார். அவர் நண்பர் சாதிக், மற்றொரு நண்பர் தீபக் ஆகியோர் மர்மமாக இறந்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் சாகப் போகின்றனரோ? மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கள்ள லாட்டரிச் சீட்டு, ரவுடியிசம் போன்றவை, ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அதிகரித்துள்ளன. ஒரு குடும்பம் லாபம் அடைய, ஏழு கோடி மக்கள் கஷ்டப்படுகின்றனர். கொள்ளையடித்ததில் கருணாநிதி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.



கருணாநிதியின் குடும்ப ஆட்சியை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்; தி.மு.க., வேட்பாளர்கள் டிபாசிட் இழக்க வேண்டும். என்னுடைய ஆட்சிக் காலத்தில், இலவச சைக்கிள் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்றவை உருவாக்கப்பட்டன. மின்வெட்டு சீராக இருந்தது, சட்டம் ஒழுங்கு சரிவர இருந்தது. கருணாநிதியால் விலைவாசியை சரிப்படுத்த முடியாது; மின்வெட்டை சீரமைக்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றுவேன். அவர்களது குடும்பத்தினரிடம் உள்ள கேபிள் தொழிலை, அரசுடைமையாக்குவேன். எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்கிற நிபந்தனை உள்ளது. அதை தவிர்த்து, எழுத, படிக்கத் தெரிந்திருந்தாலே, உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கருணாநிதி குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மக்கள் சக்தியுடன் வெற்றி கண்டார் ஹசாரே : ஊழல் ஒழிப்பு மசோதாவில் மத்திய அரசு பணிந்தது

புதுடில்லி: நாடு முழுவதும் எழுந்த அபார ஆதரவு அலை வீசியதை கண்டு மத்திய அரசு ஒரு தனிநபரின் நியாயமான, அர்த்தமுள்ள கோரிக்கைக்கு தானாக முன்வந்து பணிந்தது. அன்னா ஹசாரேயின் கோரிக்கை அனைத்தையும் ஏற்று புதிய அறிவிக்கை வெளியிட்டதையடுத்து 5 நாள் தொடர்ந்து இருந்த சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் ஹசாரே. லோக்பால் மசோதா தொடர்பான விஷயத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்காத உயர்ந்த இடத்தை பிடித்தார் ஹசாரே. 

இந்த போராட்டம் நம் மக்களுக்கானது என்றும் இது இன்னும் முடியவில்லை., உண்மையான போராட்டத்தின் இது ஒரு தொடக்கம் தான் , இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றும் , மக்களின் ஒருமித்த ஆதரவு மற்றும் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று இன்றைய போராட்டத்தை முடித்துக்கொண்ட ஹசாரே கூறினார். மத்திய அரசையே ஆட்டிப்படைத்த அவர் தனது வெற்றி அல்ல என்று மெத்தப்பணிவாக கூறி மேலும் தனது செல்வாக்கை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார். 

முன்னதாக மத்திய அரசின் லோக்பால் தொடர்பான அறிவிக்கை நகல் அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கூடியிருந்த மக்களிடம் பேசி தம்முடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்த ஆதரவாளர்களுக்கு குளிர்பானம் கொடுத்து, தாமும் தனது உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.

ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர்

ஐதராபாத் : கிரி‌க்கெட் தொடரின் சித்திரை திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர் நேற்று இன்று நடைபெறும் முதல் போட்டியில், ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சங்ககரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் 11 ஒவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 71 ரன் எடுத்துள்ளது. இரவு 8 மணிக்கு துவங்கும் மற்றொரு போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, புதிய கத்துக்குட்டி அணியான கொச்சி டஸ்கர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. துவங்கி நடைபெற்று வருகிறது.